‘விடுதலை 2’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘அரசன்’. இந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, யோகி பாபு, விஜய் சேதுபதி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக ‘அரசன்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தாமதம் காரணமாக ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி விழாவில் கலந்துகொண்ட சிம்பு, “அரசன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பொங்கலுக்கு வெளியாகாது. நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் படம் தரமான சம்பவமாக இருக்கும்” என தெரிவித்தார். அதே மேடையில் வர தீபாவளிக்கு அரசன் படத்திலிருந்து ஒரு ப்ரோமோ வெளியாகும் எனக் கூறியிருந்தார். அதன்படி, அரசன் படத்திலிருந்து ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையில் கானா பாடல் ஒலிக்க சிம்புவின் என்ட்ரி அமைந்துள்ள இந்த ப்ரோமோ கவனம் ஈர்த்து வருகிறது.
Read more