
வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்று கூறி ‘உண்மை அறிக்கை’ ஒன்றை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்குப் பதில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றக் கூடிய வெளிநாட்டினருக்கு வேலை வழங்கப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு எச்-1பி விசா பெறும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை 32 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.
அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் (ஸ்டெம்) ஆகிய 4 துறைகளில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாக்களை பயன்படுத்தி, அமெரிக்கர்களுக்குப் பதில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்துகின்றன. ஒரு நிறுவனம் 2025-ம் ஆண்டு 5,189 எச்-1பி விசா பெற்றது.