apple

ஆப்பிள் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 17 மாடல் போனைப் பெறுவதற்கு தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 மாடலை இன்று அறிமுகப்படுதியுள்ளது. எந்தவொரு ஆப்பிள் ஸ்மார்ட்போனிலும் இல்லாத வகையில் மிகக்குறைந்த தடிமனில் (5.6 மி.மீ) இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. சாங்சங் கேலக்ஸி எட்ஜ் எஸ் 25 ஸ்மார்ட்போனைவிட (5.8 மி.மீ) இது குறைவாகும்.

மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட ஐபோன் 17-ன் விலை ரூ. 82,900 முதலும் ஐபோன் 17 ப்ரோவின் விலை ரூ.1,49,900 முதலும் ஆரம்பிக்கிறது. ஐபோன் 17 மிக மெல்லிய ஐபோன் மட்டுமல்ல, உலகின் மிக மெல்லிய ஸ்லாப்-ஸ்டைல் போனாகும்.

அதன்படி ஐபோன் 17 போனுக்கு ஏற்கெனவே பலரும் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆப்பிள் ஸ்டார்களில் நேற்று நள்ளிரவு முதலே இளைஞர்கள் காத்திருந்தனர். இன்று ஐபோன் 17 அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். முன்பதிவு செய்யாத பலரும் ஐபோன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

ஐபோன் 17 ஏர் ஸ்பேஸ் பிளாக், கிளொட் ஒயிட், லைட் கோல்ட், ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

Apple iPhone 17 series sale starts in India today, long queues seen outside the Apple stores

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest