iphone-17

ஆப்பிள் நிறுவனத்தில் புதிதாக ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

இவை பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால், முன்பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகியவை தொழில்நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்ட ஸ்மார்ட்போன்களாக உள்ளன. எனினும் சமீபத்தில் இதன் பயனாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களே முன்வைக்கப்படுகின்றன.

ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களிலும் கீறல்கள் ஏற்படுவதாக பயனர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். சில வண்ணங்களை உடைய குறிப்பாக அடர் நிறங்களையுடைய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களின் தரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளன.

ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ஏர் – கீறல்கள்

ஐபோன் 17 வரிசையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் செராமிக் உறையை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது, இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் வெளிப்புறத்தில் கீறல்கள் ஏற்படுவதாகவும், இதனால் பயனாளர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும் எனக் கோரி, கீறல் விழுந்த புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

நிலைத்தன்மையுடன் வெளிப்புற உறைகளை ஆப்பிள் தயாரித்திருந்தாலும், அடர் நீலம், கருப்பு வண்ணங்களையுடைய ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஏர்களில் இத்தகைய கீறல்கள் ஏற்படுவதாக பலர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் தயாரிப்பில் இருந்து இதனையா எதிர்பார்த்தோம்? எனப் பலர் புகைப்படங்களைப் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன், டைட்டானியம் உலோகத்தாலானது. அலுமினியம் தயாரிப்பை விட அதிக நிலைத்தன்மை கொண்டதாக இது இருக்கும். எனினும், பின்புறம் செராமிக் உறையாலாக்கப்பட்டுள்ளது. ஐபோன் 17 ப்ரோ மாடல்களைப் போன்று தூசி புகாத்தன்மையுடன் இருக்கும் வகையில் IP68 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தயாரிப்புகள் எதுவாகினும் அதன் நிலைத்தன்மைக்கு 100% உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதே நிறுவனங்களின் தரப்பு விளக்கமாக உள்ளது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன்களில் அடர் நிறங்களில் மட்டுமே இத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், முடிந்த வரையில் பின்புறம் கூடுதலான உறைகளுடன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது கூடுதல் நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும்.

இதையும் படிக்க | ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு இல்லை! ஆனால் தள்ளுபடி விலையில்…

iPhone 17 Pro and iPhone Air Users Are Reporting Scratch Issues

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest