stalinmanu

சிதம்பரம்: தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக, இன்று காலை 9 மணியளவில், காமராஜா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசினா் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜா் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு, சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். அங்கு உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கிருந்த மக்களிடம் மனுக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டதன் மூலம், திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டதோடு, அவர்களிடம் விவரங்களையும் கேட்டறிந்தார். மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்பதால், மக்களிடையே, இந்த திட்டத்துக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகா்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும், கடலூா் மாவட்டத்தில் நகா்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

ஒவ்வொரு இடத்திலும் முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாள்களுக்கு முன்பாக தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முகாம் குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய விண்ணப்பங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister M.K. Stalin launched a new project called Stalin with you in Chidambaram today.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest