
உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் நன்ஹி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் காணாமல் போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
காணாமல் போன மாணவிகள் 6 அல்லது 7ஆம் வகுப்பு படிப்பவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பிரிவு 137(2)ன் கீழ் கடத்தல் வழக்கு சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்த ஒருவர் கூறுகையில், 7ஆம் வகுப்பு படிக்கும் அவரது 13 வயது மகள் அரசுப் பள்ளிக்குச் செல்ல வீட்டில் இருந்து கிளம்பினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
ஆனால் தனது மகள் வீடு திரும்பவில்லை என்றார்.
மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளும், 7ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியும் பள்ளிக்குச் செல்லும்போது காணாமல் போனதாக நர்ஹி போலீஸ் அதிகாரி வீரேந்திர சிங் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.