AP25260577672682

அமெரிக்காவில் புதிதாக எச்1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்திய வெளியான அந்நாட்டு அரசின் அறிவிப்பால், இந்திய தொழில்நுட்பத் துறையினர் மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருக்கும் தொழிலாளர்களில் 71 சதவிகிதத்தினர் (2,83,397) இந்தியர்களே. அக்டோபர் 2024 – செப்டம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், டிசிஎஸ் (TCS) நிறுவனம் மட்டும் 5,500-க்கும் மேற்பட்ட எச்1பி விசாக்களை வழங்கியது. அதனைத் தொடர்ந்து காக்னிசன்ட் – 3,700, இன்ஃபோசிஸ் – 2,004, எல்டிஐ மைன்ட் ட்ரீ – 1,807, எச்.சி.எல். டெக் – 1,728 விசாக்களையும் வழங்கியுள்ளன.

அமெரிக்காவுக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியால், இந்தியாவுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது.

மேலும், புதிய கட்டண அறிவிப்பால் அமெரிக்காவின் வருவாயிலும் பாதிப்பு ஏற்படலாம்.

அமெரிக்க வருவாயில் முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

டிசிஎஸ் – 48%

இன்ஃபோசிஸ் – 58%

எச். சி. எல் டெக் – 66%

விப்ரோ – 63%

டெக் மஹிந்திரா – 51%

இருப்பினும், ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கு டிரம்ப் அரசின் புதிய கட்டண அறிவிப்பு பொருந்தாது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்… உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest