
ஒடிசாவில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு பிபின் ஜெனா பகை காரணமாக கொலை செய்யப்பட்டார். கடலோர மாவட்டத்தில் உள்ள ராஜ்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மத்தியபடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் கிராமத்தை விட்டு ஓடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மணிப்பூரில் துணை ராணுவப் படை வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: வீரர் பலி
இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில், ஏழு குற்றவாளிகளும் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மறைவிடத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நீதிமன்றம் அவர்களின் ஜாமீன் மனுவை நிராகரித்ததையடுத்து அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக போலீஸ் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரித்தார்.