dxsss

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரையில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.

கரூர் மருத்துவமனை
கரூர் சோகம்

விஜய்யைக் காணக் கூடியவர்களில் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தவெக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் STR49 படக்குழு சார்பாக இரங்கலைப் பதிவு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தாணு.

கலைப்புலி எஸ். தாணு
கலைப்புலி எஸ். தாணு

இதுகுறித்த அவரது சமூக வலைத்தளப் பதிவில், “கரூரில் நடந்த விபத்தில், உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம். உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.

வெற்றிமாறன், சிலம்பரசன், வி கிரியேஷன்ஸ், STR49 படக்குழுவினர்” என எழுதியிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest