
குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவால் பெண் போலீஸுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் அதிகரிக்கும் முன், சக போலீஸார் தலையிட்டு அந்த ஓட்டுநரை உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு, அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரது கோபம் அத்துடன் முடிவடையவில்லை. வீட்டிற்குச் சென்ற ஆட்டோ ஓட்நர், கழிப்பறைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் அமில பாட்டிலை எடுத்து வந்து அந்த பெண் போலீஸ் மீது வீசினார்.
தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!
இதில் பெண்ணின் கை, தோள்பட்டை மற்றும் கழுத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அவர் காந்திநகர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் பிறகு கைது செய்யப்பட்டார். அசோக் என்ற நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
பெண் போலீஸ் மீதான இந்த தாக்குதல் சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.