
பல குறும்படங்களில் நடித்திருக்கும் ரித்விகா, சினிமாவில் தனது முத்திரையை பதிக்க பல்வேறு முயற்சிகள் செய்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவர். பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், ரித்விகா. அதற்குப் பின்னர், பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் ‘மேரி’ கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையடுத்து இருமுகன், ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னராகவும் அறியப்படுகிறார், ரித்விகா.

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘வால்டர்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘கடவர்’, ‘ஆதார்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘லெவன்’ திரைப்படம் என தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இடைத்தைப் பிடித்து வருகிறார்.
தற்போது திருமண வாழ்க்கை குறித்து நேற்று(ஜூலை 13) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கைத்தலம் பற்றுதல்’ என நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
ரித்விகா பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் அவரது நீண்ட நாள் நண்பரும் காதலனுமான வினோத் லட்சுமணன் என்பவர் என்று கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…