nishikant_dubey

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநில காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆக.2-ஆம் தேதி, நிகழ்ந்த இச்சம்பவத்தில் மத உணா்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக எம்.பி.க்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிராவண மாதத்தில் பாபா வைத்தியநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முக்கியப் பிரமுகா்களுக்கான வழிபாட்டு நேரத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறி கோயில் கருவறைக்குள் பாஜக எம்.பி.க்கள் நுழைந்ததாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest