
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) தெரிவித்தார்.
சர்வதேச நாடுகளின் பொருள்களுடன் போட்டிபோடும் வகையில் உள்நாட்டுத் தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்றும் அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். இதில், உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்தும் அவற்றைப் பயன்படுத்துவது குறித்தும் பேசினார்.
காணொலியில் அவர் பேசியதாவது,
”சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டுப் பொருள்களை இந்திய மக்கள் கர்வத்தோடு பயன்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்.
உள்நாட்டுப் பொருள்கள் சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டியது அவசியம். அவை உலக தரத்துடன் போட்டிபோடும் வகையில் இருப்பதும் அவசியமானது. உள்நாட்டுத் தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த இது வழிவகுக்கும். இதன்மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும்” எனப் பேசினார்.
இதையும் படிக்க | வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி