patanjali085705

புது தில்லி: பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட், நியூட்ரெலா சோயா சங்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் சில்லறை விலையை நாளை (திங்கள்கிழமை) முதல் குறைத்து, அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்க உள்ளது.

நாளை முதல் நியூட்ரெலா சங்க்ஸ், மினி சங்க்ஸ் உள்ளிட்டவை (1 கிலோ பாக்கெட்) ரூ.190க்கு விற்கப்படும். தற்போது அது ரூ.210க்கு விற்கப்படுகிறது. அதே வேளையில், 200 கிராம் பாக்கெட் ரூ.3 குறைப்பு இருக்கும் என்றது.

பிஸ்கட் மற்றும் குக்கீகள் பிரிவில், தூத் பிஸ்கட்டின் (35 கிராம்) ரூ.5 லிருந்து ரூ.4.50 ஆகவும், நூடுல்ஸில், பதஞ்சலி ட்விஸ்டி டேஸ்டி நூடுல்ஸ் (50 கிராம்) தற்போது ரூ.10 லிருந்து ரூ.9.35ஆக விற்கப்படும் என்றது.

முடி பராமரிப்பு எண்ணை (டேன்ட் காந்தி ரேஞ்ச்) விலையை குறைத்துள்ள நிலையில் அத்துடன் டேன்ட் காந்தி நேச்சுரல் டூத் பேஸ்ட் 200 கிராம் விலை ரூ.120 லிருந்து ரூ.106 ஆக குறைத்துள்ளது.

கேஷ் காந்தி ஆம்லா ஹேர் ஆயில் (100 மிலி) இனி ரூ.48 லிருந்து ரூ.42 ஆக இருக்கும். இதேபோல், உடல்நலம் மற்றும் ஆரோக்கியப் பொருட்களில், ஆம்லா ஜூஸ் (1000 மிலி) இனி ரூ.140க்கு விற்கப்படும், தற்போது இது ரூ.150 ஆக உள்ளது.

சியாவன்பிராஷ் 1 கிலோ பேக் இனி ரூ.337 ஆக இருக்கும், தற்போது இது ரூ.360ஆக உள்ளது. பால் பொருட்களில், பசு நெய் (900 மில்லி) அதன் விலையை ரூ.780லிருந்து ரூ.732ஆக குறைத்துள்ளது.

இந்த திருத்தத்தின் மூலம், பதஞ்சலி ஃபுட்ஸ், தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 70,297 கோடி டாலராக உயர்வு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest