AP25208388442846

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து 311 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் சாதனை

முதல் இன்னிங்ஸில் 141 ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்து பென் ஸ்டோக்ஸ் சாதனை படைத்தார்.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 7,032 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு இரட்டைச் சதம், 14 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 258 ஆகும்.

டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, கர்ஃபீல்டு சாபர்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் இருவரும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

இதையும் படிக்க: 46 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!

England captain Ben Stokes has set a new record in Test matches.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest