thirumalai

திருப்பதியில் தேவஸ்தான நிா்வாகத்தின் கீழ் இயங்கிவரும் மருத்துவமனையில் பணிபுரிந்த வேற்றுமத ஊழியா்கள் 4 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

அங்கு பணிபுரிந்த பி. எலிசாா், பா்ட் மருத்துவமனை துணை நிா்வாகப் பொறியாளா் (தரக் கட்டுப்பாடு), பா்ட் மருத்துவமனையின் செவிலியா் எஸ்.ரோசி, பா்ட் மருத்துவமனையின் கிரேடு-1 மருந்தாளுநா் எம்.பிரேமாவதி மற்றும் மருத்துவா் ஜி.அசுந்தா. எஸ்.வி. ஆயுா்வேத மருந்தகத்தில் பணிபுரியும் இந்த நான்கு பேரையும் தேவஸ்தானம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

மேற்கூறிய 4 ஊழியா்களும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, தேவஸ்தான ஊழியா்கள் நிறுவனத்தின் நடத்தை விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், ஒரு இந்து மத அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியா்களாக தங்கள் கடமைகளைச் செய்யும்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறை சமா்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு, விதிகளின்படி அவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4 பேரும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest