
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார்.
பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.15 ஆம் தேதி நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடினார்.
ਇਹੀ ਹੈ ਮੁਹੱਬਤ ਦੀ ਦੁਕਾਨ❤️
ਜਿੱਥੇ ਇੱਕ ਨੇਤਾ ਅਤੇ ਜਨਤਾ ਵਿੱਚ ਦਿਲ ਦਾ ਰਿਸ਼ਤਾ ਬਣਦਾ ਹੈ!
ਇਹ ਹੈ ਰਾਹੁਲ ਗਾਂਧੀ ਦੀ ਪਹਿਚਾਣ #RGvisitPunjab pic.twitter.com/vd59iWgm26
— Punjab Congress (@INCPunjab) September 17, 2025
அமிர்தசரஸ் மாவட்டத்தின் கோனேவால் கிராமத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்தபோது, தனது சைக்கிள் வெள்ளத்தில் சேதமடைந்ததால் அழுத அம்ரித்பால் எனும் 6 வயது சிறுவனுக்கு, புதிய சைக்கிள் வாங்கி தருவதாகக் கூறி ராகுல் காந்தி ஆறுதல்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனுக்கு ராகுல் காந்தி தற்போது புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுபற்றி, பஞ்சாப் காங்கிரஸ் வெளியிட்டுள்ள விடியோவில், புதிய சைக்கிள் குறித்து அம்ரித்பாலுடன் ராகுல் காந்தி உரையாடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்லெஜ், ரவி உள்ளிட்ட நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கின.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட ராகுல் காந்தி, மாநில மற்றும் மத்திய அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை விரைந்து வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, பிகாரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில், தனது பைக்கை பறிகொடுத்த இளைஞருக்கு, ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!