G1C3cdcXUAAB6yw

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனைப் படைத்த உசைன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனைப் படைத்துள்ள இவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்திருக்கிறார்.

உசைன் போல்ட்
உசைன் போல்ட்

100 மீட்டரை வெறும் 9.58 நொடிகளில் கடந்து அசத்தியிருக்கிறார். ‘மின்னல் வேக மனிதன்’ என்று அழைக்கப்பட்ட உசைன் போல்ட் 2017ல் சர்வதேச தடகள அரங்கில் இருந்து விடை பெற்றார்.

இப்படி பல சாதனை படைத்த உசேன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதுத்தொடர்பாக ‘The Guardian’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், ”நான் இளமையாக இருந்தபோது நான் வேகமாக ஓடியது உண்மையில் எனக்கு ஒரு பிரச்னையாக இருக்கவில்லை.

இப்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது.

உசைன் போல்ட்
உசைன் போல்ட்

ஒட்டப்போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றதால் உடற் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது. 2017 ஆம் ஆண்டு நான் ஓய்வு பெற்றப் பிறகு என் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

உடற்பயிற்சி குறைந்துவிட்டது. மீண்டும் ஓட்டப்பயிற்சியைத் தொடங்க இருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest