
பிரதமர் மோடி தனக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட மரக்கன்றை இன்று நட்டு வைத்தார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசாக கடம்ப மரக் கன்று ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.
அந்த மரத்தை தில்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மன்னர் மூன்றாம் சார்லஸ் எனக்குப் பரிசளித்த கடம்ப கன்றை லோக் கல்யாண் மார்க் 7-ல் இன்று காலை நட்டேன்.
2026 ஆஸ்கர் விருதுக்கு ஹிந்தி படம் ‘ ஹோம்பவுண்ட் ’ தேர்வு!
சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. இது எங்கள் விவாதங்களிலும் இடம்பெறும் ஒரு தலைப்பு ஆகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம், பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சோனோமா மரக் கன்று ஒன்றை பரிசாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.