குவெட்டா: ​பாகிஸ்​தானில் கார் குண்டு வெடித்​துச் சிதறிய​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32 பேர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்தானின் தென்​மேற்கு பகு​தி​யில் பலுசிஸ்​தான் மாகாணம் அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் மொத்த பரப்​பள​வில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்​டுள்​ளது. கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் தனி நாடு​களாக உதய​மான​போது பலுசிஸ்​தானும் தனி நாடாக உரு​வெடுத்​தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்​தான் ராணுவம், பலுசிஸ்​தானை ஆக்​கிரமித்​தது.

அப்​போது​முதல் பாகிஸ்​தான் அரசுக்​கும் கிளர்ச்சி குழுக்​களுக்​கும் இடையே உள்​நாட்​டுப் போர் நடை​பெற்று வரு​கிறது. அந்த மாகாண மக்​கள் மிக நீண்ட கால​மாக தனி நாடு கோரி போராடி வரு​கின்​றனர். பாகிஸ்​தான் ராணுவ அடக்​கு​முறை​யில் இது​வரை லட்​சக்​கணக்​கான மக்​கள் கொல்​லப்​பட்டு உள்​ளனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest