1377427

இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கை​யின் பெயரில் அந்​நாட்டு ராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதில் அப்​பாவி மக்​கள் பலர் கொல்​லப்​படு​வ​தாக தொடர்ந்து புகார் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இந்த மாகாணத்​தின் திரா பள்​ளத்​தாக்​கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்​தில் நேற்று அதி​காலை​யில் பாகிஸ்​தான் போர் விமானங்​கள் 8 குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தின. இதில் பெண்​கள், குழந்​தைகள் உட்பட அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். தாக்​குதலில் பலர் காயம் அடைந்​தனர். அங்கு கட்​டிட இடி​பாடு​களை அகற்​றும் பணி தொடர்​கிறது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest