பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடம்ப மரக் கன்று ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17) பாஜக ஆளும் மாநிலங்களில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரதமர் மோடிக்கு கடம்ப மரக் கன்று ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம், மத்திய அரசின் “ஏக் பெட் மா கே நாம்” எனும் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு இந்தப் பரிசை மன்னர் சார்லஸ் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சோனோமா மரக் கன்று ஒன்றை பரிசாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!