
பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
ரியோ டி ஜெனிரோவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில் பிரேசில் பெண் கலைஞர்கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்றனர்.