
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 2 நாள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 2 நாள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 23.07.2025 முதல் 24.07.2025 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032.
பயிற்சி முடிவில், பின்வரும்வற்றை கற்றுக்கொள்வீர்கள்:
* மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தை தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.
* மோட்டார், பேட்டரி, கட்டுப்பாட்டி, சார்ஜிங் அமைப்புகள் இயக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சர்வீசிங் முறைகள் மற்றும் அடிப்படை கோளாறுகளை கண்டறியும் திறன், EV டீலர்ஷிப், பழுது சரிசெய்தல் நிலையங்கள் மற்றும் ஃபிராஞ்சைஸி தொழில் மாடல்களை செயல்படுத்தும் பயிற்சி பெறுவீர்கள்.
*மின்சார வாகனத் துறையில் கிடைக்கும் அரசுத் திட்டங்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் குறித்து வழிகாட்டல் பெறுவீர்கள்.
* இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
*மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337 / 9360221280
* முன்பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!