
முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.
நியூசிலாந்து அபார வெற்றி
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி மத்விர் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் 21 ரன்களும், டோனி முனியோங்கா 13 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 40 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரச்சின் ரவீந்திரா 30 ரன்களும், டேரில் மிட்செல் 26 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் பிளஸ்ஸிங் முஸராபானி மற்றும் டினோடெண்டா மபோசா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
New Zealand won the tri-series T20I against Zimbabwe by 8 wickets.
இதையும் படிக்க: இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்; பாராட்டு மழையில் ரவீந்திர ஜடேஜா!