fifa

கால்பந்து அணிகளுக்கான உலக அளவிலான ஃபிஃபாவின் தரவரிசையில் அதிர்ச்சியளிக்கும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

நடப்பு உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா கடந்த 28 மாதங்களாக முதலிடத்தில் இருந்தது. தற்போது, முதல்முறையாக மூன்றாவது இடத்துக்குக் கீழிறங்கியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

மொத்தம் 48 அணிகளில் இதுவரை 18 அணிகள் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளன.

மார்ச்.2023 முதல் தொடர்ச்சியாக 28 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீனா, இந்த மாதத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இளம் வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதிகபட்சமாக ஸ்லோவோகியா பத்து இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தையும், ஜிம்பாப்வே மிக மோசமாக ஒன்பது இடங்கள் பின்தங்கி 125-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்திய அணி ஓரிடம் பின் தங்கி 134-ஆவது இடத்திலும் கடைசி இடத்தில் (210) சான் மரினோ இருக்கிறது.

ஃபிபாவின் புதிய தரவரிசை

1. ஸ்பெயின் – 1875.37 புள்ளிகள்

2. ஃபிரான்ஸ் – 1870.92 புள்ளிகள்

3. ஆர்ஜென்டீனா – 1870.32 புள்ளிகள்

4. இங்கிலாந்து – 1820.44 புள்ளிகள்

5. போர்ச்சுகல் – 1779.55 புள்ளிகள்

6. பிரேசில் – 1761.6 புள்ளிகள்

7. நெதர்லாந்து – 1754.17 புள்ளிகள்

8. பெல்ஜியம் – 1739.54 புள்ளிகள்

9. குரேஷியா – 1714.2 புள்ளிகள்

10. இத்தாலி – 1710.06 புள்ளிகள்

There have been shocking changes in FIFA’s global rankings for football teams.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest