நடிகர் கவின் ஃபேண்டசி கதையில் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கான வெளியீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதனை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமாகியுள்ளார். தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்குகிறார்.
அடுத்ததாக, கவினின் 9-வது படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இயக்க, நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் கென், “நடிகர் கவினின் புதிய படத்தை ஃபேண்டசி காதல் கதையாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்குகிறது. வழக்கமான ஃபேண்டசி கதையாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பராசக்தி வெளியீட்டில் மாற்றம்?