22

அசாம் மாநிலத்தில் இன்று(ஆக. 18) பிற்பகல் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது.

நாகோன் மாவட்டத்தில் இன்று உணரப்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இன்று பிற்பகல் சரியாக 12.09 மணிக்கு 35 கிமீ ஆழத்தில் நாகோன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

இந்த மாதத்தில் அசாமில் ஏற்பட்ட 7 ஆவது நில அதிர்வு இதுவாகும். மேலும் நாகோன் பகுதியில் 3-வது நிலநடுக்கம் ஆகும். இப்பகுதியில் கடந்த ஆக. 7, 8 ஆகிய தேதிகளில் முறையே 3.8, 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

An earthquake of magnitude 4.3 jolted the Nagaon district of Assam

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest