
நடிகர் அஜித் குமார் அவருடன் பணியாற்றிய இயக்குநர்களைச் சந்தித்துள்ளார்.
நண்பர்கள் நாளான இன்று பலரும் தங்கள் நண்பர்களுடான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் நினைவுகளைப் பதிவு செய்கின்றனர்.
அப்படி, நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ. ஆர். முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன், அனிருத் உள்ளிட்டோர் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், “நண்பர்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அது நேற்று, இன்று, நாளை மற்றும் எப்போதும் உள்ளது. நண்பர்கள் நாள் நல்வாழ்த்துக்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் அஜித் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.
Friends are not time bound. Yesterday , today, tomorrow and the eternal. Happy friendship day.@directorsiva @ARMurugadoss @Adhikaravi @anirudhofficial @itsmanuanand #FriendshipDay2025 pic.twitter.com/HMvwVUG49A
— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2025
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: அன்பும் அரவணைப்பும்… சக இயக்குநர்களுடன் கௌதம் மேனன்!