
வாஷிங்டன்: அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே நாங்கள் 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்தோம். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன், காரணம், அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறார்கள். உக்ரைன் மீதான தாக்குதலுக்கான எரிபொருளை அவர்கள் ஊக்குவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.