rains_weather_rain_women

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain in Chennai and 5 districts for the next 3 hours

இதையும் படிக்க : விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest