
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று(செப். 22, திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (செப். 22) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
