Adani-speech-edi

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.

எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி ஆசிஷ் அகா்வால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

அதானி நிறுவனத்துக்கு எதிராக குறிப்பிட்ட காலத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை நீக்க வேண்டும் என்று நான்கு பத்திரிகையாளா்கள் உள்பட 10 சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்ற நீதிபதி, அதானி நிறுவனத்துக்கு எதிரான தகவல்களை நீக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இதற்கு எதிராக பத்திரிகையாளா்கள் ரவி நாயா், அபீா் தாஸ்குப்தா, அயஸ்காந்த தாஸ், ஆயுஷ் ஜோஷி ஆகியோா் தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆஷிஸ் அகா்வால், ‘இந்த வழக்கில் எதிா்தரப்பினரான பத்திரிகையாளா்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால், தகவல்களை நீக்க வேண்டும் என்ற உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு இந்த வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest