
பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரிட்டன் நாட்டவர்களின் உடல்களில் இரண்டு உடல்கள் மாற்றி அனுப்பிவைக்கப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் அளித்த புகாருக்கு மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மேலும், இந்திய நாட்டு அதிகாரிகள், பிரிட்டன் நாட்டின் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துகொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்றும், பிரிட்டன் நாட்டவரின் உடல்கள் அதீத கவனத்துடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டிலிருந்து வந்திருக்கும் தகவலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம், எங்கள் கவனத்துக்கு வந்திருக்கும் இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்துகிறது. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில், அனைத்து விதமான கோட்பாடுகளும், தகவல் தொழில்நுட்ப முறைமைகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
புகார் என்ன?
ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் இருந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே பலியாகினர். இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து பலியான 26 பேரின் உடல்கள் பிரிட்டன் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 2 உடல்கள், மரபணு பரிசோதனையில் உறுதிசெய்யப்படவில்லை என்றும், தங்களது உறவினர்களின் உடல்கள் மாற்றப்பட்டுவிட்டதாகவும் பிரிட்டன் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
மேலும், இரண்டு சவப்பெட்டிகளில் இருந்த வெவ்வேறு நபர்களின் உடல்பாகங்களை, உறவினர்களின் பிரித்தெடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.