unnamed

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

கல்யாணத்திற்கு வரன் பார்க்கும் போது…ஒளிந்து மறைந்து ஓடியாடி ஒரு முத்தமாவது முழுமையாகக் கிடைக்குமா? இல்லை கிடைக்காதா?? ன்னு பார்வையில் காதல் கொள்ளும் கூட்டுக் குடும்பம்தான் என் முதல் தேர்வு .

எப்பவும் கொஞ்சி மகிழும் தனிக்குடித்தனத்தில் பெரிதாக விருப்பமேயில்லை .

ஆனந்தமான வாழ்க்கை வாழ அன்பான குடும்ப உறவுகள் நம்முடன் இருந்தாலே போதும் ன்னு நினைத்த சராசரி மனுஷி நான் .

உறவுகளுக்காக சுயம் இழந்து வாழ்ந்தால் தவறில்லை என எண்ணும் முற்போக்கு வாதியும் கூட.

அதுமட்டுமல்லாமல் தாத்தா பாட்டி ,மச்சினர், நாத்தனார், இவர்கள் இருக்கும் வீட்டில் வளரும் பிள்ளைகள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்பதும் எனது எண்ணமாக இருந்ததால்,

அப்பாகிட்ட கூட்டுக்குடும்பத்தில் வாழணும்ன்ற என் ஆசையைச் சொன்னேன்.

அதன்படியே வரன் அமைய… மாப்பிள்ளையோட பெயரைக்கேட்க..

அத்தான் அடித்த காமெடியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.’ நெத்தியடி’ திரைப்படத்தில் ஜனகராஜ் பேசுவது போல..

‘வேணு’… ன்னு இழுக்க

நான் சிணுங்க… மீண்டும் அத்தான் ஜனகராஜ் குரலில்,

வேணு ..’. இதெல்லாம் கெட்ட பழக்கம் கண்ணு வந்திருக்கவங்க தப்பா நினைக்கப் போறாங்க.. திருகாணிய திருப்பிக் கொடுத்துடு கண்ணு…’ன்னு ராகமாக இழுவையாக நடித்துக் காண்பிக்க.. அனைவரும் பயங்கரமாக சிரித்து விட்டோம்.

என் மாமியார், நான்

முழுப் பெயரும் வேணுதானா ன்னு கேட்க?, இல்லை முழுப்பெயர் வேணுகோபால் ன்னு அத்தான் சொன்னது நினைவலைகளில் !

கடந்த காலத்தை நினைவு கொள்வது

ஒரு சுகம்

தற்கால நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க

இந்த நினைவு கொள்ளுதல் தேவைப்படுகிறது.

அமாவாசைக்கு அடுத்த தினமான பாட்டியம்மையன்று பெண் பார்க்க வந்தார்கள்… உறவுகளுக்குஆச்சரியம்.. நல்ல நிகழ்விற்கு இந்த நாளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்களே என்று..(பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டிலுமே ஜோதிடம் ,ஜாதகம் ,நல்ல நாள் கெட்ட நாள் இதில் எதிலும் நம்பிக்கை இல்லை… நல்ல எண்ணம் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும் என்பதில் இரு குடும்பமும் ஒரே அலைவரிசையில் .. இருந்தன)

மாமா (என் பிரியத்துக்குரிய மாமானார்)எங்க( வளவனூர் )வீட்டு முகவரியை தாளில் எழுதி தரச் சொல்ல (சென்னை தி.நகர் அக்கா வீட்டில்பெண் பார்க்கும் படலம்) நானும் பயபக்தியோடு வெள்ளைத் தாளில் கருப்பு மையில்… எங்கள் வீட்டு முகவரியை எழுதி மாமாவிடம் நீட்ட..,அதை வாங்கிய மாமா,

உடனே நிமிர்ந்து பார்த்து கையெழுத்து மிகவும் அழகாக இருக்கிறது ஆதிரை.ன்னு பாராட்ட… என்மனதில்… மாமா விஸ்வரூபமாய்…

பாராட்டை முழுமையாக அனுபவிப்பதற்குள்… உடன் வந்த நட்பான ஒரு அம்மா(பெயர் வேண்டாமே) ‘பெண் மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். விரல்கள் எல்லாம் நீள நீளமாக இருக்கிறது’ என்று ஏதேதோ முணுமுணுக்க…காதில் விழுந்து தொலைத்தது.

.ஆனா எங்க மாமா உடனடியா எங்களுக்கு பெண்ணை மிகவும் பிடித்திருக்கிறது உங்களுக்கும் விருப்பம்ன்னா முகூர்த்த தேதியை முடிவு செய்யலாம்ன்னு சொல்ல.. மனசில இசைஞானி எனக்கே எனக்காய் வயலின் வாசித்தார்.

மாமாவுக்கும் எனக்குமான தோழமை ஆரம்பித்த புள்ளிஅது.

மாமாவின் முதல் பேச்சு முதல் பாராட்டு கல்வெட்டாய் மனதிற்குள் இன்னமும்.

திருமணத்தன்று காலை… அறைக்கு வந்த ஆசிரியையான அத்தை

விட்டுக் கொடுப்பதும்+ மன்னிப்பதும் தான் வாழ்க்கை. ஆனா.. வாழ்க்கையின் போராட்டம் யார் விட்டுக் கொடுப்பது? யார் மன்னிப்பது? என்பது தான்.

நீயே முதலில்விட்டுக்கொடு ஆதிரை. நீயே முதலில் மன்னித்தும் விடு ஆதிரைன்னு.என. நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி… என் கரம்பிடித்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்.

மனதுக்குப் பிடித்ததை செய்!மகிழ்ச்சியாக வாழ்!இவ்வளவுதான் வாழ்க்கை என எளிமையாக வாழ்க்கைக்கு புது அர்த்தத்தையும் கற்றுக் கொடுத்த அத்தையின் மேல் மதிப்புக் கூடியது அந்த நொடி.

ஒரு சுபயோக சுபதினத்தில் வலது காலை எடுத்து வைத்து என் புகுந்த வீட்டிற்குச் செல்ல…

அங்கு பல கலகலப்புகள்

சில சலசலப்புகள் …கும்மியடிக்க .. வாழ்க்கை தெளிந்த நீரோடையாய்…!

திருமண நிகழ்வுகளில் இவர்கள் பற்றி எழுதக் காரணம் … அவங்க ரெண்டு பேரும் இல்லைனா என் செல்ல ‘சந்தியாப்பா’ இல்லையே… (நான் என்னவரை ‘சந்தியாப்பா’என்று அழைத்தே பேசுவேன்.)

வைத்த குழம்பு நன்றாக இருக்குன்னு பாராட்டணும்னு அவசியம் இல்ல. இன்னும் கொஞ்சம் குழம்பு ஊத்தச் சொன்னாலே .. அர்த்தம் விளங்கற அளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல். இருக்குன்னா அதற்கு காரணம்… எங்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை மற்றும் அத்தை மாமாவின் வளர்ப்பு தான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்

கொள்வதல்ல காதல் .

ஒரே திசையில் பார்ப்பது

ஒரே லட்சியத்தை நோக்கிப் பார்ப்பது . .(என் பிள்ளைகளுக்கும் இதையே சொல்லித்தான் வளர்த்தேன்.)

நகரத்து இயந்திர வாழ்க்கையில் நசுங்கிப் போனது… பலரின் சுகமான திருமண நினைவுகள்.

அதை மீட்டெடுக்கும் அற்புதப் பணியை செய்யும் ‘மை விகடனுக்கு’ அன்பு முத்தங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest