
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது அன்புக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன்.
அவர் ஒரு ஊக்கமளிக்கும் தொலைநோக்கு சிந்தனையாளர், அதிசிறந்த விஞ்ஞானி, நம்பிக்கையூட்டும் வழிகாட்டி மற்றும் சிறந்த தேசபக்தராக நினைவுகூரப்படுகிறார்.
நமது தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. வளர்ச்சியடைந்த மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க பங்களிக்கும் வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவரது எண்ணங்கள் ஊக்கமளிக்கின்றன.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையயொட்டி ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.