
ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து எக்ஸ் தளத்தில், ‘சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடக்கத்தின் காரணம் குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் இன்னமும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், அரசு தரப்பில் இருந்து எக்ஸ் தளத்தின் இந்தக் காரணத்தை முற்றிலும் மறுத்துள்ளது.

மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்படுவதாவது…
“கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூரின் போது, ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட பல நூறு எக்ஸ் தள கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு கூறியிருந்தது.
ஆனால், அப்போது பல நூறு கணக்கு முடக்கப்பட்டிருந்தாலும், ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடக்கப்படவில்லை.
இப்போது முடக்கப்பட்டிருப்பதற்கு காரணம், அப்போதைய கோரிக்கையாக இருக்கலாம்” என்று கூறியுள்ளது.
இந்தக் காரணமாக இருந்தால், மீண்டும் விரைவில் இந்தியாவில் ராய்ட்டர்ஸ் பக்கத்தின் முடக்கம் நீக்கப்படும்.