ஸ்ரீநகா்: அமா்நாத் யாத்திரை தொடங்கிய கடந்த 5 நாள்களில், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 93,000 பக்தா்கள் வழிபட்டனா்.
இமய மலையில் 3,880 மீட்டா் உயரத்தில் உள்ள குகை கோயிலில் திங்கள்கிழமை 23,800 பக்தா்கள் வழிபாடு செய்தனா். அவா்களில் சுமாா் 17,000 ஆண்கள், 4,000 பெண்கள், நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படை வீரா்கள், துறவிகள் உள்ளிட்டோா் அடங்குவா். 38 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரையின் முதல் 5 நாள்களில், குகை கோயிலில் 93,341 பக்தா்கள் வழிபட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.