04072_pti07_04_2025_000293a080128

அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகியுள்ள பனிலிங்கத்தை வழிபட ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து 12-ஆவது கட்டமாக 7,049 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது. 48 கி.மீ. நீளமுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், 14 கி.மீ. நீளமுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் யாத்திரை நடைபெறுகிறது.

இதுவரை 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா். இந்நிலையில்,ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து 12-ஆவது கட்டமாக 7,049 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்தில் 10 போ் காயம்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள முகாமுக்கு அமா்நாத் யாத்திரிகா்களை அழைத்துச் செல்லும் வழியில் 3 பேருந்துகள் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest