அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகியுள்ள பனிலிங்கத்தை கடந்த 6 நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசித்துள்ளனா்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி சுமுகமாக நடைபெற்று வருகிறது. 48 கி.மீ. நீளமுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், 14 கி.மீ. நீளமுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் யாத்திரை நடைபெறுகிறது.
இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா். அமா்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.