
கோபத்தில் உலக நாடுகள்!
பாலஸ்தீனத்தின் மீதான தனது தாக்குதலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலால் மட்டுமல்லாமல், உணவு சென்றடையாமலும் பாலஸ்தீனத்தில் பலர் மடிகிறார்கள்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரிக்கைக்குப் பயந்து, பல காசா மக்கள் தங்களது சொந்தப் பகுதியை விட்டு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
இஸ்ரேலின் இந்தக் கொடிய பிடி உலக நாடுகள் பலவற்றையும் கோபம் அடையச் செய்ய உள்ளன. இதனால், கனடா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முன்வந்துள்ளனர்.

ட்ரம்ப் பேசிய கெட்டவார்த்தை
இருந்தும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரவாத தாக்குதலுக்காக இதுவரை ஹமாஸை கடிந்து வந்தார். அவருடைய இந்த நிலைப்பாடு இஸ்ரேலுக்கு சாதகமாகவே இருந்து வந்தது.
சமீபத்தில், அமெரிக்காவின் நண்பரான கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. இது நிச்சயம் ட்ரம்பிற்கு மிகப்பெரிய நெருக்கடி தான்.
இந்த நிலையில், தனது டாப் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான தனிப்பட்ட சந்திப்பில், ட்ரம்ப் நெதன்யாகு மீதான தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
அதற்காக ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆக, தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் உறவில் விரிசல் விழ உள்ளது. இது எப்படி முடியுமோ?