
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கு ‘வரி’ அறிவித்துள்ளார். அனைவரும் அறிந்ததே.
இதன் மூலம் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் வந்து குவியும் என்று கூறுகிறார் அவர்.
ட்ரம்ப் பதில்
‘பிற நாடுகளில் இருந்து வரும் வரிகளை அமெரிக்கா என்ன செய்யும்?’ என்கிற கேள்வி, ட்ரம்பிடம் OAN செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “இந்த வரிகளை அமெரிக்காவின் கடன்களை அடைக்க பயன்படுத்துவோம்.
பின்னர், இந்த வரி பணத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்கலாம் என்றும் நினைக்கிறோம். அது 1,000 – 2,000 டாலர்களாக இருக்கலாம்” என்று பதிலளித்துள்ளார்.

மோடி
இது இந்தியர்களுக்கு எங்கோ கேள்விப்பட்டது போல இருக்கும். ஆம், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது,
பிரதமர் மோடி தான் வெற்றி பெற்றால், ‘வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு இந்திய மக்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன்’ என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அது இன்னும் வந்தபாடில்லை. ஆக, தனது நண்பர் மோடி வழியைப் பின்பற்றுவாரோ அல்லது உண்மையில் அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் கொடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.