Amazon-great-indian-fest

அமேசான் பிரைம் பயன்படுத்துவோருக்கு முன்கூட்டியே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா மூலம் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் சலுகை விலையில் பொருள்களை வழங்கி வருகிறது.

இந்த முறை செப். 23 முதல் இந்த சலுகைத் திருவிழா தொடங்குகிறது. எனினும், பிரைம் பயனாளர்களுக்கு முன்கூட்டியே இன்று முதல் (செப். 22) சலுகைகள் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த இணைய விற்பனை தளமாக அமேசான் பண்டிகைகாலத்தையொட்டி சலுகை விலையில் பொருள்களை வழங்கி வருகிறது. ஆயுத பூஜை – தீபாவளியையொட்டி, இம்முறை செப். 23 முதல் தொடங்கும் சலுகைத் திருவிழா, பிரைம் பயனாளர்களுக்கு ஒருநாள் முன்னதாக இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதில், எந்தெந்த பொருள்களின் விலை குறைந்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

ஆப்பிள் மேக் மினி 2024

ஆப்பிள் பிரியர்கள் ஆப்பிள் மேக் மினி 2024 மாடலை ரூ. 49,999க்கு பெறலாம். இதன் உண்மை விலை ரூ. 64,900. எம்-4 சிப்செட் உள்ளதால் வணிகப் பயன்பாடுகளுக்கு உகந்தது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9

அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் டேப் பிரியர்கள் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9ஐ ரூ. 39,999க்கு பெறலாம். ஸ்நாப்டிராகன் 8, 2ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

ஹெச்பி விக்டஸ் கேமிங் லேப்டாப்

மடிக்கணினியை வாங்க விரும்புவோர் ரூ. 81,990 கொடுத்து ஹெச்பி விக்டஸ் கேமிங் மடிக்கணினியை வாங்கலாம். இதன் ஆரம்ப விலை ரூ. 99,990.

ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 4 (2025)

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 4 2025 மாடல் ரூ. 80,990க்கு கிடைக்கிறது. மிகக்குறைந்த எடை. 18 மணிநேர பேட்டரி நீடிக்கும் திறன். தவணை முறையிலும் வட்டியின்றி பணத்தை செலுத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6

ஸ்மார்ட் கடிகாரப் பிரியர்கள் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 என்ற கிளாசிக் வாட்ச்சை வாங்கலாம். தள்ளுபடி விலையில் ரூ. 15,999க்கு கிடைக்கிறது. மேம்படுத்தப்பட்ட பேட்டரி திறன், அமோலிட் திரை கொண்டது.

அமேசான் எக்கோ டாட்

ஸ்பீக்கர் விரும்புவோருக்கு அமேசான் எக்கோ டாட் சிறந்த தேர்வாக இருக்கும். குரல் ஒலிகளை துல்லியமாக இதில் கட்டுப்படுத்த முடியும். இதன் விலை ரூ. 4,449.

சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவதற்குத் தேவையான ஃபயர் ஸ்டிக் ரூ. 2,499க்கு கிடைக்கிறது. இதன்மூலம் அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து பொதுழுதுபோக்கலாம்.

இதையும் படிக்க | ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ஏர் தரமற்றவையா? குவியும் புகார்கள்!

Amazon Great Indian Festival 2025 Live for Prime Members

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest