Capture-1

அம்பிகாபதி திரைப்படத்தின் கிளைமேக்ஸை ஏஐ உதவியால் மாற்றியதற்காகத் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் ஹிந்தியில் அறிமுகமான முதல் படமான ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவான இப்படம் அன்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவான அனைத்து பாடல்களும் படத்திற்கு உயிரோட்டமாக அமைந்தன.

இந்த நிலையில், இப்படம் 12 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் திரையரங்குகளில் மறுவெளியீடானது.

ஆனால், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமான தயாரிப்பு நிறுவனம் ஏஐ உதவியால் படத்தின் உண்மையான கிளைமேக்ஸை மாற்றியது. இதனைக் கண்டு வேதனையடைந்த படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஏஐ உதவியால் ராஞ்சனாவின் மறுவெளியீட்டு கிளைமேக்ஸ் மாற்றப்பட்டது என்னைத் தொந்தரவு செய்தததுடன் இந்த கிளைமாக்ஸ் மாற்றம் படத்தின் ஆன்மாவையே சிதைத்துவிட்டது. என் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்தச் செயலை செய்துள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த திரைப்படம் இல்லை.

இதையும் படிக்க: துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப்பு!

திரைப்படங்களையும் படைப்புகளையும் ஏஐ தொழில்நுட்பம் கொண்டு மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது சினிமாவின் பாரம்பரியத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. இது போன்ற செயல்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இணையம் முழுக்க அகரம் சூர்யா!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest