202506163429962

அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

கோராக்நாத் கோயில் வளாகத்தில், இன்று (செப்.10) நடைபெற்ற மகான் திக்விஜய்நாத்தின் 56-வது நினைவு நாளையும், மகான் அவைத்தியநாத்தின் 11-வது நினைவு நாளையும் முன்னிட்டு நடைபெற்ற விழாவில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“இன்று, இந்தியாவில் உள்ள யாரேனும், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைக் கண்டு பெருமையடையாமல் இருப்பார்களா? அப்படியொருவர் இருந்தால் அவர் இந்தியரா? என்பதே சந்தேகம்தான்” எனப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மகான் திக்விஜய்நாத் அடிமைத் தனத்தின் சின்னங்களை அகற்ற தீர்மானித்ததாகவும், அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தை அகற்றி, அங்கு மிகப் பெரிய ராமர் கோயில் கட்டவேண்டும் என அவர் கனவு கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இன்று மகான் திக்விஜய்நாத் மற்றும் மகான் அவைத்தியநாத் இருவரது கனவும் நிறைவேறியுள்ளதாகவும் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that if someone is not proud of the Ayodhya Ram Temple, it is doubtful whether he is an Indian.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest