lalettan

மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருஷபா’ திரைப்படத்தின் டீசரை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மோகன் லால் – இயக்குநர் நந்தா கிஷோர் ஆகியோரது கூட்டணியில் வரலாற்று கதைகளத்துடன் உருவாகியுள்ள புதிய படம் “விருஷபா”.

மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் படம்பிடிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், நடிகர் மோகன் லால் அரசனாக நடித்துள்ளார்.

நடிகர்கள் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று (செப்.18) வெளியிட்டுள்ளனர். மேலும், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்படம், வரும் தீபாவளி பண்டிகையின்போது திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

The team has released the teaser of the film ‘Vrusshabha‘ starring actor Mohan Lal.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest