MK-Stalin-table-edi

அரசு சார்பில் பிறப்பிக்கப்படும் அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,

நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.

ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! “அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

Chief Minister M.K. Stalin has said that government orders issued by the government should be implemented.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest