
மும்பை: அரசை விமர்சிப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறதா? என்பதைக் குறித்து பாஜக ஆளுங்கட்சியாக உள்ள மகாராஷ்டிரத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விளக்கமளித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘மகாராஷ்டிர சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024’ இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதில் குறிப்பிடும்படியாக, குற்றம் சுமத்தப்படுவோர் மீது குற்றம் நிரூபனமானால் அவருக்கு அபராதமாக அதிக தொகையும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றை வரியின்கீழ் அரசை விமர்சிப்பவர்களுக்கெதிரான நடவடிக்கையாகவே இது அமைகிறது என்று இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொது வெளியிலிருந்து விமர்சனமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்தநிலையில், மகாராஷ்டிரத்தில் அமல்படுத்தப்படவுள்ள ’சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா’ மூலம் அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எதுவும் பாயாது எனவும், ஆனால், நகர்ப்புற நக்சஸல்கள் போலச் செயல்படுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.