ANI_20250726085120

அலுவலக பணியாளர்களுக்காக தனி மெனு வடிவமைக்கப்பட்டு உணவு ஆர்டர் செய்வதில் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ‘ஸ்விக்கி’.

ஸ்விக்கி உள்ளிட்ட தளங்களில், வழக்கமாக ஒவ்வொரு உணவகமாக தேர்ந்தெடுத்து அதன்பின் அதிலிருக்கும் உணவு வகைகளைப் பார்த்து அதனை தேர்வு செய்வதற்கு பதிலாக கார்ப்பரேட் ஊழியர்களை மையப்படுத்திய இந்த சேவையால்

வெகு சீக்கிரமே ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்துவிடலாம். நெடுநேரம் ஸ்விக்கியில் உணவு மெனுக்களைப் புரட்டிப் பார்த்து தேடும் பணி மிச்சமாகிறது. ’டெஸ்க் ஈட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதி முதல்கட்டமாக சென்னை, பெங்களூரு, மும்பை, புணே, தில்லி, கொல்கத்தா உள்பட 30 பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Swiggy has introduced a new feature called DeskEats

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest