
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணிக்கு இந்தியா 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்று (ஜூலை 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 24 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆகாஷ் தீப் அசத்தல்; தடுமாறும் இங்கிலாந்து
கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 536 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளும் தேவைப்பட்டது. இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் மழையால் தாமதம் ஆனது.
மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டு இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் இரண்டு விக்கெட்டுகளை ஆகாஷ் தீப் வீழ்த்தி அசத்தினார். ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை அவர் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 500 ரன்களுக்கும் மேலாக தேவைப்படுகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
England, who are chasing a target of 608 runs to win the second Test against India, are struggling to keep up with the loss of wickets.
இதையும் படிக்க: அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன்: வைபவ் சூர்யவன்ஷி